ரொம்ப சுமாரா இருக்கின்றதா ‘பிகில்’ டிரைலர்? நெட்டிசன்கள் புலம்பல்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் ‘பிகில்’ படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த டிரைலருக்கான விமர்சனங்கள் கலவையாகவே சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகிறது

பிகில் படத்தின் அப்பா விஜய் அப்படியே மெர்சல் படத்தின் அப்பா விஜய்யை ஞாபகப்படுத்துவதாகவும், மகன் பிகில் கேரக்டரிலும் இதற்கு முன் பார்த்த பல படங்களில் உள்ள விஜய்யின் நடிப்பு, கிண்டல், மேனரிசம் மற்றும் பஞ்ச் வசனங்கள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

ஃபுட்பால் கிரவுண்ட், புட்பால் விளையாட்டு காட்சிகள், வீராங்கனைகளின் உணர்வுகள் ஆகியவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது என்ற உண்மையையும் நெட்டிசன்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும் மாஸ் மற்றும் ஆக்சன் காட்சிகள் வேண்டுமென்றே வலிய திணித்தது போல் இருப்பதாக விமர்சனங்கள் சொல்லப்பட்டாலும் முழு படத்தை பார்த்தால் மட்டுமே ஒரு முடிவுக்கு வர முடியும்

மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமானால் இந்த டிரைலர் வெறித்தனமாக இருக்கலாம், ஆனால் நடுநிலை ரசிகர்களுக்கு இந்த டிரைலர் சுமாராகவே இருப்பதாக தெரிகிறது. எனினும் முழு படம் வெளியாக இன்னும் 15 நாட்களே இருப்பதால் அதுவரை பொறுமை காப்போம்

Leave a Reply