ரேஷன் கடைகளில் ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணம் வழங்குவது சரியா? சமூக ஆர்வலர்கள் கேள்வி

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரேஷன் கடைகளில் ரூபாய் ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது

இந்த நிலையில் தனிமைப்படுத்துதலை வலியுறுத்தி வரும் தமிழக அரசே அதை மீறுவது சரியா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

ரேஷன் கடையில் ரூபாய் 1000 வாங்குவதற்காக முண்டியடித்து மக்கள் செல்லும்போது ஒருவரை ஒருவர் தொட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் ஊரடங்கு உத்தரவே கேலிக்கூத்தாக்கும் நிலை ஏற்படலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

ஒவ்வொரு ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக, நேரடியாக வங்கியில் டெபாசிட் செய்வதுதான் சரியானது என்றும், அவர்களை ரேஷன் கடைக்கு வரவழைத்து ரொக்கமாக பணம் கொடுப்பது என்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது

Leave a Reply