ரெபோ விகிதம் குறைந்தும் ஏறாத பங்குச்சந்தை

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதால் முதலீட்டாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் இதனை சரிக்கட்டும் வகையில் ரெப்போ விகிதம் 35 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படுவதாக ஆர்பிஐ அறிவித்தது

இந்த அறிவிப்புக்கு பின்னரும் சென்செக்ஸ் கரடியின் பிடியில் இருப்பதால் பங்குச்சந்தை நிபுணர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இன்றைய பங்குச்சந்தை சென்செக்ஸ் 130 புள்ளிகள் சரிவடைந்து 36,847.09 புள்ளிகளாக இருந்தது. நிப்டி, 10,900 என்ற அளவில், வணிகமாகிக்கொண்டு இருக்கிறது. முன்னேற்றத்தை அடையும் என்று எதிர்பார்த்த நிலையில் பங்குச் சந்தை ரிவர்ஸ் கியரில் செல்வது முதலீட்டாளர்கள் நடுவே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply