ரெட் அலர்ட் வாபஸ்: ஆனால் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை

தமிழகத்தை போலவே கேரளாவிலும் ஒருசில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கேரளாவில் மழை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.

மேலும் இடுக்கிக்கு ஆரஞ்ச் அலர்ட், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு போன்ற பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டுக்கு பதில் எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இந்த நிலையில் சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின்படி மத்திய மேற்கு வங்கக்கடலில் சூறைக்காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும், தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரியில் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Leave a Reply