shadow

ரூ. 500, ரூ.1000 ஒழிந்தவுடன் பாஜகவும் ஒழிந்துவிடுமா? தமிழிசை செளந்திரராஜன்

குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை பெற்று வருவதால் கிட்டத்தட்ட இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்துவிட்டதாகவே கருதப்படுகிறது. குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இழுபறி நிலை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கின்றது பாஜக

இந்த வெற்றி குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, ‘பேரவைத் தேர்தல் நடந்த 2 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ரூ. 500, ரூ.1000 ஒழிந்தவுடன் பாஜகவும் ஒழிந்துவிடும் என சிலர் கூறினர். ஆனால் அந்த கருத்து தற்போது தவிடுபொடியாகியுள்ளது.

நாட்டில் உள்ள மக்கள் மகிழ்ச்சியான தருணத்தில் இருந்து கொண்டுள்ளார்கள் என்பதற்கு இந்த வெற்றி ஒரு உதாரணம். மேலும் இந்த வெற்றி வாரிசு அரசியலுக்கு எதிராகவும், இந்தியாவின் வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது என்றும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பாஜக முன்னிலை வகிப்பது, மக்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கும் ஆதரவை வெளிப்படுத்துகிறது’ என்றும் தமிழிசை கூறியுள்ளார்

Leave a Reply