shadow

உலகின் நம்பர்-1 தேடுபொறி நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டின் ஆணையம் ரூபாய் 4,500 கோடி அபராதம் விதித்துள்ளது

கூகுள் நிறுவனம் தங்கள் நாட்டின் செய்தி நிறுவனங்களின் செய்தியை பயன்படுத்தி வருமானம் ஈட்டுகிறது என்றும் அந்த வருமானத்தில் செய்தி நிறுவனங்களுக்கு பங்கு அளிக்கவில்லை என்றும் வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடந்த நிலையில் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4500 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது/ இந்த அபராதத்தை செலுத்தும் முறையை கூகுள் நிறுவனம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால் தினமும் 8 கோடி அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது