shadow

ரூ.2000 நோட்டு அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டதா?

ரூ.2000 நோட்டை அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் ரூ.2000 நோட்டு செல்லாமல் போகும் என்ற நிலை ஏற்படாது என்றும் எனவே ரூ.2000 வைத்திருப்பவர்கள் பதட்டமடைய தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தபோது பணத்தட்டுப்பாட்டை போக்க 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால் இந்த நோட்டுக்கள் பதுக்கப்படுவதாகவும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல குற்ற காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்தூள்ள நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018ஆம் மார்ச் மாதத்தின்படி ரிசர்வ் வங்கி ரூ.18.03 லட்சம் கோடியை புழக்கத்தில் விட்டது. அதில் 37சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் 43சதவீதம் 500 ரூபாய் நோட்டுகள். மற்ற தொகைகள் மீதி சதவீதத்துக்குள் அடங்கியது. இந்நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளின் வரத்தை குறைப்பதால் ரூ.500 நோட்டை அச்சிடுவதை அதிகப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply