shadow

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா சில ஆண்டுகளாக ஆபாசம் கலந்த கவர்ச்சி படங்களை இயக்கி வருகிறார் என்பதும் அந்த படங்கள் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் ‘லடுகி’. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் இந்தியாவின் முதல் தற்காப்பு கலை படம் என்று கூறப்படுகிறது.

இந்த படம் டிசம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் இந்த படத்தில் பூஜா பலேகர் என்ற தற்காப்புக்கலை வீராங்கனை முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது