shadow

ராணுவ நீர்மூழ்கி கப்பல் திடீர் மாயம்: 44 பேர் கதி என்ன?

அர்ஜெண்டினா நாட்டில் ராணுவத்திற்கு சொந்தமான நீர்மூழ்கிக்கப்பல் திடீரென மாயமாகிவிட்டதால் அதில் இருந்த ராணுவ வீரர்கள் உள்பட 44 பேர்களின் கதி என்ன என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தெற்கு அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென கப்பல் மாயமானது. கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ஊழியர்கள் உள்பட 44 பேரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக கடற்படை அதிகாரிகள் கூறுகையில், தெற்கு அட்லாண்டிக் கடலில் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடி வருகிறோம். கடந்த வியாழன் அன்று விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கடலில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி நாட்டு அரசுகளும் கப்பலை தேடும் பணியில் உதவிசெய்து வருகின்றன. விரைவில் கப்பல் மீட்டு விடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply