shadow

ராஜஸ்தான் முதல்வர், துணை முதல்வர் தேர்வு

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் இன்று காலை மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சற்றுமுன் ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ராஜஸ்தான் மாநில துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வாகியுள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது.

அதேபோல் இன்னும் சிலமணி நேரங்களில் சத்தீஷ்கர் முதல்வர் பெயரும் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply