shadow

ராஜபக்சேவுடன் சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி எம்.பி. இலங்கையில் நேற்று முன்னாள் அதிபர் ராஜபக்சேவை சந்தித்துள்ளார். ராஜபக்சேவின் இல்லத்டில் நடந்த இந்த சந்திப்பின்போது டெல்லிக்கு வருமாறு ராஜபக்சேவுக்கு சுப்பிரமணியசாமி அழைப்பும் விடுத்தார்.

மேலும், நேற்று முன்தினம் மரணம் அடைந்த ராஜபக்சேவின் இளைய சகோதர சந்திர ராஜபக்சேவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

இந்த சந்திப்பு குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் கூறியபோது, “இலங்கையின் தென்பகுதிக்கு சென்று முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி தரும் நிகழ்வாக இருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவது என்ற உறுதியான முடிவை எடுத்தவர் என்ற வகையில் அவர் பாராட்டுக்குரியவர். அதேபோல் ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் படுகொலை செய்ததால் இந்தியர்கள் கொண்டிருந்த மிகுந்த வேதனையை தணித்தவரும் ஆவார்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply