ராசாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி வாங்கிய ஸ்டாலின்

தேர்தல் நேரம் வந்துவிட்டாலே பெரியவர்களிடமும் பிரபலங்களிடமும் ஆசி வாங்கும் ஞாபகம் அரசியல்வாதிகளுக்கு வந்துவிடும். அந்த வகையில் சமீபத்தில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர்கள் பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாராமல் பலரிடம் ஆசி பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழியின் தாயாரின் வீட்டுக்கு சென்று அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ராசாத்தி அம்மாளின் மகள் கனிமொழி, தூத்துகுடி தொகுதியின் திமுக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply