ராகுல், பிரியங்கா தமிழகம் வருவது எப்போது?
ஒருபக்கம் பாஜக தலைவர்களான பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் நிதின்கட்காரி ஆகியோர் தமிழகத்திற்கு படையெடுத்து வர திட்டமிட்டுள்ள நிலையில் இன்னொரு பக்கம் காங்கிரஸ் தலைவர்களும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.
மக்களவை தேர்தல் பரப்புரைக்காக இந்தமாதம் பிரியங்கா காந்தி தமிழகம் வரவிருப்பதாகவும், அதேபோல் ராகுல்காந்தியும் இந்த மாதம் இரண்டுமுறை தமிழகம் வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மாறி மாறி தமிழகத்திற்கு வரவிருப்பதாக் இரு கட்சி தொண்டர்கள் சுறுசுறுப்பாகியுள்ளனர். ஆனால் வாக்காளர்கள் வழக்கம்போல் இரண்டு கட்சிகளையும் கண்டுகொள்ளாமல் தங்களுடைய வேலையை அமைதியாக பார்த்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.