shadow

ராகுல் பிரதமர் என்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலினுக்கு அகிலேஷ் யாதவ் பதிலடி

திமுக தலைவர் முக ஸ்டாலின், சமீபத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்.

ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு ஏற்கனவே மம்தா பானர்ஜி உள்பட ஒருசில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது உபி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பிரதமர் பதவிக்காக ராகுல் பெயரை ஸ்டாலின் எடுத்திருக்கலாம். இதற்கு அவரை எதிர்க்கட்சியினர் அனைவரும் தம் தலைவராக ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை”

”நம் நாட்டின் பொதுமக்கள் பாஜக தலைமையில் ஆளும் மத்திய அரசு மீது கடும் கோபமாக உள்ளனர். இதனால் தான் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் மெகா கூட்டணிக்காக முயன்று வருகின்றனர். இந்த கூட்டணியினர் யாராவது ஒருவரின் விருப்பத்தை ஏற்க வேண்டும் என்பது அவசியமில்லை” என அகிலேஷ் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply