shadow

ராகுல் காந்தி எங்களுக்கு சில டாஸ்குகள் கொடுத்துள்ளார். குஷ்பு

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு இன்று டெல்லி சென்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலைமை குறித்து அவரிடம் கலந்து ஆலோசித்ததாகவும் தனக்கும் இன்னும் சிலருக்கும் அவர் கட்சியை வளர்க்க சில டாஸ்குகள் கொடுத்துள்ளதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

மேலும் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொருப்பை ஏற்றால் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் கூறிய குஷ்பு தமிழகத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரே இல்லை என்று கூறுபவர்களுக்கு தான் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்

ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும்போது தான் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆனதாகவும் தனது உறுப்பினர் அட்டை 2019 வரை செல்லத்தக்கதாக இருப்பதாகவும் குஷ்பு மேலும் தெரிவித்தார்.

Leave a Reply