shadow

‘ராகுலை விட அவரது நாய் அழகாக இருக்கிறது’: பாஜக கிண்டல்

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருப்பவர்களில் ஒருவர் ராகுல் காந்தி. அவர் பதிவு செய்யும் ஒவ்வொரும் பதிவிற்கும் லைக்குகள் குவியும்

இந்த நிலையில் ராகுல்காந்தி அவராகவே டுவீட் செய்வதில்லை என்றும், அவருக்கு பதிலாக வெறொருவர் டுவீட் செய்வதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர்

இதற்கு பதிலளிக்கும் வகையில் ராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியதாவது: ‘எனக்காக யார் ‘டுவிட்’ செய்கிறார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். நான் தெளிவாக சொல்கிறேன். இது தான் (நாய்) என்னோடு இருக்கிறது. நான் தான் ‘டுவிட்’ செய்கிறேன்’ என்று பதிலடி கொடுத்தார்.

இந்த கருத்திற்கு பா.ஜ.க. தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா பதிலளிக்கையில் ‘ராகுலை விட அவரது நாய் அழகாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார். மேலும் ராகுல்காந்தி சைக்கிளில் தனது நாயுடன் செல்வது போன்ற படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

 

Leave a Reply