ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தில் பாம்பு!

இதுவரை பேய்க்கதைகளை காமெடி மற்றும் த்ரில் கலந்து இயக்கி வந்த ராகவா லாரன்ஸ் அடுத்ததாக பேயை கைவிட்டு பாம்புகளை தனது படத்தில் இணைக்கவுள்ளதாக கூறப்படுகிறது

ராகவா லாரன்ஸ் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு ‘கால பைரவா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திலும் அவரே முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். பாம்பு கேரக்டரில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார்.

ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா’ திரைப்படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அவர் ‘காலபைரவா’ படப்பிடிப்பை தொடங்குவார் என்றும், இந்த படத்திலும் அவருடைய ஆஸ்தான நட்சத்திரங்களான கோவை சரளா,தேவதர்ஷினி, ஸ்ரீமான், ஆகியோர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply