shadow

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் சர்வதேச தடை

mariyaபெண்கள் டென்ஸ் உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த ரஷியாவின் மரியா ஷரபோவா உலகஅளவில் அதிக பணம் சம்பாதிக்கும் வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்த நிலையில் தற்போது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சர்வதேச போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்ட மரியாவுக்கு ஊக்கமருந்து சோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டது. அந்த மாதிரியில் தடை செய்யப்பட்ட மெல்டோனியம் என்ற மருந்தை பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டது. இதுகுறித்து சர்வதேச டென்னிஸ் பெடரேஷன் ஊக்கமருந்து தடுப்புப்பிரிவு மேற்கொண்ட விசாரணையில் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷியா அணி சார்பில் அவர் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே நான் மெல்டோனியத்தை கடந்த 10 வருடமாக பயன்படுத்தி வருகிறார் என்று கூறியிருந்த மரியா, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

மரியா ஷரபோவா ஊக்கமருந்து பயன்படுத்தியதாக செய்தி வெளியான உடனேயே பெரும்பாலான ஸ்பான்சர்கள் அவரை விட்டு விலகின. இதனால் அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனை என்ற பெருமையை இழந்தார். தற்போது அந்த இடத்தை அமெரிக்காவின் செரீனா நம்பர் ஒன் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply