ரயில் மீது லாரி மோதிய விபத்து: ரயில் பயணிகள் 34 பேர் காயம்

ஜப்பான் நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரியும், பயணிகள் ரயிலும் ஒன்றோடு ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் லாரி ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ரயிலில் பயணம் செய்த 34 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டோக்கியோவில் உள்ள யோகோஹாமா நகரம் அருகே, ரயில்வே கடவு பாதை அமைந்துள்ளது. இந்த பாதை வழியாக பயணிகள் ரயில் ஒன்று டோக்கியோ நோக்கி செல்ல முயன்றபோது, திடீரென கடவுப்பாதை வழியாக பழங்கள் ஏற்றி வந்த லாரி மிக வேகமாக வந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் லாரி உருக்குலைந்ததோடு, ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கரும்புகை வெளியேறியது.

இந்த கோர விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். ரயிலில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமுற்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 34க்கு மேற்பட்டோர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply