ரஜினி ரசிகர்கள் கிழிகிழின்னு கிழிச்சு தொங்கவிடப்போகும் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ள ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என சற்றுமுன் லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து வெளியான வீடியோ ஒன்றில் அனிருத் கூறியதாவது: தலைவரின் ‘தர்பார்’ படத்தில் எஸ்பிபி அவர்கள் பாடிய ’சும்மா கிழிகிழி’ பாடல் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என்று அனிருத் கூறியுள்ளார்.

இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் இந்த தேதியில் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கிழிகிழின்னு கிழிச்சு தொங்கவிட காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது

Leave a Reply