ரஜினி ரசிகர்களுக்கு ஓணம் விருந்து தரும் லைகா நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தின் இரண்டாம்லுக் இன்று ஓணம் திருவிழாவை ஒட்டி மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது

இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருப்பதோடு ஓணம் திருவிழாவின் விருந்தாகவும் கருதப்படுகிறது. இன்று வெளியாகும் இரண்டாம் லுக்இதுவரை இல்லாத அளவில் ரஜினியின் ஸ்டைல் வெளிப்படும் என்றும் அட்டகாசமான இந்த இரண்டாவது லுக் போஸ்டரை வரவேற்க தயாராக இருங்கள் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் பாடல் அக்டோபரில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply