ரஜினி பட பெயரில் பீட்சா: அசத்திய ரஜினி ரசிகர்

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் பீட்சா கடை நடத்தி வரும் நிலையில் அந்த பீட்சா கடையில் நேற்று முன்தினம் ரஜினி பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடினார்

இதனை அடுத்து ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெயர்களில் பீட்சாவை தயாரித்து 30 ஆதரவற்ற குழந்தைகளை வரவழைத்து அவர்களுக்கு சாப்பிடக் கொடுத்தார்

கோச்சடையான் பீட்சா, பில்லா பீட்சா, உழைப்பாளி பிட்சா என விதவிதமாக ரஜினிகாந்த் பெயரில் உருவான பீட்சாக்களை அந்த சிறுவர்கள் சாப்பிட்டு மகிழ்ந்து கடைக்காரருக்கு நன்றி தெரிவித்தனர்

ஸ்டார் பீட்சா என்ற கடையை சென்னை அண்ணாநகரில் வைத்திருக்கும் இவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply