shadow
ரஜினி, தினகரன், காங்கிரஸ், திருமாவளவன் கூட்டணியா?
தமிழகத்தில் ரஜினி தலைமையில் ஒரு கூட்டணியும், ஸ்டாலின் தலைமையில் ஒரு கூட்டணியும் வரும் என நேற்று ரஜினியை சந்தித்த பின்னர் கராத்தே தியாகராஜன் கூறியதில் இருந்தே அரசியல் விமர்சகர்கள் கற்பனையில் ஒரு கூட்டணியை உருவாக்க தொடங்கிவிட்டனர்.
அதன்படி ரஜினி தலைமையில் காங்கிரஸ், திருமாவளவன் மற்றும் தினகரன் கட்சி ஆகியவை கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. ஸ்டாலின் தலைமையில்  கம்யூனிஸ்ட், பாமக மற்றும் தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கமல் கட்சியும் பாஜகவும் தனித்து விடப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட கமல் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை கமல் சந்தித்திருந்தாலும், ரஜினியா? கமலா? என்ற கேள்வி வரும்போது காங்கிரஸ் ரஜினியை தேர்வு செய்யும் என்ற நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply