shadow

ரஜினி, கமல் இணைய வேண்டும்: விஷால்

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ள விஷால் ‘ அயோக்யா’ , ‘ விஷால் 27 ‘ , ‘ விஷால் 28 ‘ போன்ற படங்களில் நடித்து வந்தாலும் ‘ சன் நாம் ஒருவர் ‘ , ‘ இளையராஜா 75 ‘ நிகழ்ச்சி என சமீப காலமாக மிகவும் பிஸியாக உள்ளார் . 2017 ல் நடந்த ஆர்.கே.நகர் தேர்தலில் நாமினேஷன் செய்தது மட்டுமல்லாமல் அவ்வப்போது சில அரசியல் விமர்சனங்களை பற்றியும் கூறி வருவார்.

இந்த நிலையில் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ரஜினியும், கமலும் சேர்ந்து வர வேண்டும். அது நடிகர் சங்க விழாவுக்கோ, பிரபலங்களின் வரவேற்புக்கோ, வேற எதுக்குமோ கிடையாது. அது வரும் மக்களவை தேர்தலுக்காக…அது மாற்றத்தை கொண்டு வரும் நடவடிக்கையாக அமையும்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க நாளின்போது ரஜினி வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பதும், ரஜினி போன்ற நல்லவர் ஆதரவு தனக்கு எப்போதும் தேவை என கமல் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply