ரஜினி கமலால் அரசியலில் வெற்றி பெற முடியுமா? அரவிந்தசாமி கணிப்பு

ஒரு பெரிய நடிகர், புகழ்பெற்ற நடிகர் என்பதற்காக மட்டுமே மக்கள் ஓட்டு போட்டு விட மாட்டார்கள். அவர்கள் அறிவிக்கும் திட்டங்கள், நல்ல திட்டங்களை அவர்களால் செயல்படுத்த முடியுமா? என்பதை வைத்து அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று நடிகர் அரவிந்தசாமி கூறியுள்ளார்

ஒரு புகழ்பெற்ற நடிகர், சினிமாவில் கிடைத்த புகழை வைத்து அரசியலில் திறம்பட ஆட்சியை நடத்தி விடலாம் என்று எண்ண முடியாது. ஒரு ஆட்சியை நடத்துவதற்கு தேவையான அறிவை அவர் புத்தகங்கள் மற்றும் அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே ஒருவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அரவிந்த் சாமி கூறியுள்ளார்

ரஜினி மற்றும் கமல் அரசியலுக்கு புதிதாக வரவுள்ள நிலையில் அரவிந்த்சாமியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply