ரஜினி கட்சி தொடங்கினாலும் திமுக தான் ஆட்சியை பிடிக்கும்: ரஜினியின் நண்பர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா? மாட்டாரா? என கடந்த சில மாதங்களாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் ஏப்ரல் மாதம் அவர் கண்டிப்பாக கட்சி ஆரம்பிப்பார் என்றே கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் திமுகவுக்குத்தான் அதிக பாதிப்பு இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இதனை மறுப்பவர்களும் உண்டு. ரஜினியாக் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திராவிட கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் திருச்சி மக்களவை தொகுதியின் எம்பியும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான திருநாவுக்கரசர் இன்று பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘ரஜினி உட்பட யார் கட்சி தொடங்கினாலும் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

ரஜினி கட்சி ஆரம்பித்தால் திருநாவுக்கரசர், ரஜினி கட்சிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ரஜினிக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

Leave a Reply