ரஜினியை எனது கட்சியில் இணைத்து கொள்ள தயார்: கமல்ஹாசன்
சூப்பர் ஸ்டார் ரஜினியை தங்கள் கட்சியில் இழுக்க பாஜக, காங்கிரஸ், திமுக என அனைத்து முக்கிய கட்சிகளும் முயற்சித்த நிலையில் தற்போது கமல்ஹாசனும் ரஜினியுடன் கைகோர்த்து அரசியல் களத்தில் இறங்க சம்மதம் தெரிவித்துள்ளார். நேற்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், ‘ரஜினி விரும்பினால் எனது அணியில் அவரை இணைத்து கொள்ள தயார் என்று கூறியுள்ளார்
இந்த நிகழ்ச்சியில் மேலும் கமல்ஹாசன் பேசியதாவது: ‘நான் தொழிலுக்காக நடித்து வருகின்றேன். ஆனால், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர். அறவழியில் போராடுவதே ஆரம்பம் அஹிம்சையின் உச்சக்கட்டம் போராட்டம். மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயாராக இருக்கிறேன்.
அரசியலுக்கு வந்தப்பின் ரஜினியிடம் அரசியல் குறித்து பேசுவேன். ரஜினி விரும்பினால் எனது அணியில் இணைத்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். எனது வாரிசுகளுக்காக அரசியலுக்கு வருவதாக கூறவில்லை மாற்றம் தேவை என்றுதான் அரசியலுக்கு வருவதாக கூறினேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.