shadow

ரஜினியின் ‘பேட்ட’ டிரைலர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் டிரைலர் நாளை அதாவது டிசம்பர் 28ல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சன் பிக்சர்ஸ் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்கள் இந்த டிரைலரை வரவேற்கவும் புதிய சாதனை ஏற்படுத்தவும் தயாராகி வருகின்றனர்.

ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் 2019ஆம் ஆண்டின் முதல் மாஸ் ஹிட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply