ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் இன்னொரு வில்லன்?
ரஜினியின் தர்பார் திரைப்படத்தில் ஏற்கனவே பிரதிக் பாபர் என்ற பாலிவுட் நடிகர் வில்லனாக நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு பாலிவுட் நடிகர் ஜாட்டின் சர்னா என்பவர் இணைந்துள்ளார். இவரும் இந்த படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
தற்போது மும்பையில் ரஜினி, ஜாட்டின் சர்னா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் இந்த படத்தில் ஜாட்டின் சர்னா, மும்பை ரெளடியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், பிரதிக் பாபர், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.