ரஜினியின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த லதா ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வந்த ’தர்பார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை அடுத்து இருவரும் சமீபத்தில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்திய பள்ளி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக சிறுத்தை சிவா கலந்து கொண்டுள்ளார். இதிலிருந்து ரஜினியின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பது உறுதியாகி உள்ளதாக தெரிகிறது

 

Leave a Reply