ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த தனுஷ் பட தயாரிப்பாளர்

தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்று வெளியாகவிருந்த நிலையில் எதிர்பாராத காரணத்தினால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் மதன் கூறியபோது, ‘இன்று வெளியாகவிருந்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை வெளியிட பெரும் முயற்சிகள் பல செய்தும் வெளியிட முடியவில்லை என்றும், இதனை பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருவதாகவும் மிக விரைவில் அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதுவரை ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தேவை என்றும், ரசிகர்கள் பொறுமையுடன் எங்களையும் இந்த திரைப்படத்தையும் ஆதரிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இத்திரைப்படத்தை திரையரங்கில் நீங்கள் பார்க்கும்போது உங்கள் இத்தனை காத்திருப்பையும் இப்படைப்பு நியாயம் செய்யும் என உளமாற நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply