shadow

ரசிகருக்கு பதிலடி கொடுத்த ‘ஸ்பைடர் ‘ பட நடிகை !

தீரன் அதிகாரம் ஒன்று, ‘ஸ்பைடர் ‘போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரித்திசிங். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ரகுல் ப்ரித்திசிங் அணிந்திருந்த ஆடையை ரசிகர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் நிலையில் ஒரு டுவிட்டை ரகுல் ப்ரித்திசிங் பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில்
‘உங்கள் அம்மா காரில் இருந்து இறங்கி வந்தால் இப்படித்தான் பேசிவீர்களா? பெண்களை மதிக்க உங்கள் அம்மாவிடம் அறிவுரை கேட்டு நடந்து கொள்ளுங்கள். உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை பெண்கள் பாதுகாப்பாக வெளியே நடமாட முடியாது. பெண்கள் பாதுகாப்பு, அவர்களுக்கு சம உரிமை வழங்குவது எல்லாம் விவாதத்தில் மட்டுமே உள்ளது’ என்று கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய அந்த ஸ்டில்லில் ரகுல் ப்ரித்திசிங் காரில் இருந்து இறங்கி வருவது போன்று உள்ளது. இந்த ஸ்டில் இணையத்தில் பெரும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியதோடு ரகுல் பேண்ட் போட மறந்துவிட்டார் என பலர் விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply