யோகி பாபுவுக்கு முதல் முதலாக திருமண பரிசு கொடுத்த தனுஷ்: வைரலாகும் புகைப்படங்கள்

யோகி பாபு சமீபத்தில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த திருமணம் வெகு எளிமையாக அவரது குடும்பத்தினர்கள் முன்னிலையில் மட்டும் நடைபெற்ற நிலையில் வரும் மார்ச் மாதம் திருமண வரவேற்பில் பிரம்மாண்டமாக நடத்த யோகி பாபு திட்டமிட்டுள்ளார்

இந்த நிலையில் திருமணத்திற்குப் பின் முதல் முறையாக கர்ணன் படத்தின் படப்பிடிப்பில் யோகிபாபு கலந்துகொண்டார். அவரை வரவேற்ற படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு திருமண கேக் ஒன்றை வெட்டி வாழ்த்து கூறினார்

மேலும் தனுஷ் தனது திருமண பரிசாக தங்க செயின் ஒன்றை யோகி பாபு கழுத்தில் அணிந்து விட்டார். யோகிபாபுவுக்கு முதல் திருமண பரிசு தங்கச் செயினை கொடுத்தது தனுஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply