யோகிபாபு ஒரு மணி நேரம் காமெடி செய்யும் படம் எது தெரியுமா?

பொதுவாக ஒரு படத்தில் காமெடி நடிகருக்கு அதிகபட்சம் அரை மணி நேர காட்சிகள் மட்டுமே வைப்பதுண்டு. ஆனால் சுரேஷ் இயக்கி வரும் ‘பட்டிபுலம்’ படத்தில் யோகிபாபுவின் காமெடி காட்சி மட்டும் சுமார் ஒரு மணி நேரம் உள்ளதாம்

இந்த படத்தில் வீரசமர் என்ற நடிகர் ஹீரோவாகவும், ‘தற்காப்பு’ படத்தில் நடித்த அமிதாராவ் நாயகியாக நடித்துள்ள நிலையில் திரைக்கதைக்கு யோகிபாபுவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த படம் குறித்து இயக்குனர் சுரேஷ் கூறியபோது, ‘நான் ஷக்திசிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன். அந்த பார்முலாவின்படி யோகிபாபுவை இந்த பட்டிபுலத்தில் பயன்படுத்தி கொண்டேன். இந்த படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார்.. அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப்படுத்தி இருக்கிறார்.

கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊரில் உள்ள சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் இந்த படத்தில் நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம்..

Leave a Reply