யோகிபாபுவின் கூர்கா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான யோகிபாபு கதாநாயகனாக நடித்த ‘தர்மபிரபு’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் யோகிபாபுவின் அடுத்த படமான ‘கூர்கா’ படத்தின் ரிலீஸ் தேதி வரும் ஜூலை மாதம் 12 என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தர்மபிரபு’ ரிலீஸ் ஆன இரண்டே வாரத்தில் ‘கூர்கா’ திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் அவர் நடித்த மற்ற இரு படங்களும் வெகுவிரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாம் ஆண்டன் இயக்கத்தில் ராஜ் ஆர்யன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் யோகிபாபு, ஆனந்த்ராஜ், லிவிங்ஸ்டன், பிரதீப் , கனடா நடிகை எலிசியா உள்பட பலர் நடித்துள்ளனர்

Leave a Reply