shadow

யார் இந்த ஷோபியா?

சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் விமானத்தில் சென்றபோது ‘பாசிச பாஜக ஒழிக’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மாணவி ஷோபியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருடைய ஜாமீன் மனு இன்று மதியம் 12 மணிக்கு தூத்துகுடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் யார் இந்த ஷோபியா என்று பார்ப்போம்

தூத்துக்குடி மாவட்டம் மூன்றாம் மைல் பகுதியைச் சேர்ந்த சாமி – மனோகரி தம்பதியின் மகள் சோபியா, மகன் கிங்ஸ்டன். சாமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் மனோகரி, தலைமை செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கிங்ஸ்டன், தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், பள்ளிப் படிப்பை தூத்துக்குடியில் முடித்த சோபியா, ஜெர்மனியில் M.Sc இயற்பியலும், கனடாவில் M.Sc கணிதமும் முடித்து விட்டு, தற்போது அங்குள்ள மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இணைய தளங்களில் சமூக கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்த அவர், சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார்.

இந்த நிலையில், விமானத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையை பார்த்தபோது, பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை நேரடியாக தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைதாகியுள்ளார்.

Leave a Reply