இந்திய-சீன பிரச்சனை குறித்து சீன தூதர்

இந்தியா மற்றும் சீனா இடையே சமீபத்தில் பிரச்சனைகள் பெரிதாகி வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் யாருக்கும் பயனில்லாத மோதல் விளையாட்டு என சீன தூதர் தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்றும், அச்சுறுத்தல்களை முன்வைப்பதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் மோதலை விட அமைதி தேவை என கூறிய சீன தூதர் சன் வீடோங், இரு நாடுகளும் சந்தேகத்தை வளர்ப்பதற்கு பதிலாக நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்றார்

யாருக்கும் பயனில்லாத மோதல் விளையாட்டை விடுத்து இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும்
இந்தியாவிற்கான சீன தூதர் சன் வீடோங் தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply