shadow

ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு எத்தனை தொகுதி? திமுக திட்டம்

திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் ஏற்கனவே கூறியும், வலிய வந்து திமுக கூட்டணிக்கு இந்த இரு கட்சிகளும் ஆதரவு அளித்துளன,.

இந்த நிலையில் இந்த இரு கட்சிகளுக்கும் வரும் பாராளுமன்ற தேர்தலில் தலா ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் வைகோ மற்றும் திருமாவளவன் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தாமக, கமல் கட்சி கூட்டணியில் இணைந்தாலும் அவர்களுக்கும் தலா ஒரு தொகுதி தான் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் மார்க்சிஸ்ட், இ.கம்யூ. கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. எனவே காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக சுமார் 20 தொகுதிகளில் திமுக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply