shadow

மோடியை ரஜினி பாராட்டுவதா?- திருமாவளவன் கண்டனம்

நேற்று ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை ரஜினிகாந்த் பாராட்டினார். இதற்கு இன்று விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோடி மட்டுமின்றி உலகில் உள்ள ஒவ்வொரு தலைவர் மீது ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கும். ஒருசிலரின் பார்வைக்கு நல்லவராக தெரிபவர் இன்னும் சிலரின் பார்வைக்கு கெட்டவராக தெரியலாம். ஒரு நபரை பாராட்டுவதோ விமர்சனம் செய்வதோ அவரவர் உரிமை. ஆனால் அவரை ஏன் பாராட்டினாய் என்று கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இந்த அடிப்படை ஞானம் கூட இல்லாமல் ஒருசிலர் பாராட்டுபவரை விமர்சனம் செய்வது உண்டு.

அந்த வகையில் பிரதமர் மோடியை பாராட்டிய ரஜினியை விசிக தலைவர் விமர்சனம் செய்துள்ளார். கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் காக்கத்தான் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வருவதாகவும், அவர்களுக்காகத்தான் மோடி ஓடி ஓடி உழைப்பதாகவும், ஏழை-எளிய அடித்தட்டு மக்கள் நலனுக்காக அவர் உழைக்கவில்லை என்றும், அப்படிப்பட்ட மோடியை ரஜினி பாராட்டுவதா? என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

Leave a Reply