shadow

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் காலமானார்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் அவர்கள் இன்று காலமானார். அவருக்கு வயது 65. உலகம் முழுவதும் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனத்தை பில்கேட்ஸ் அவர்களுடன் இணைந்து பால் ஆலன் கடந்த 1975ஆம் ஆண்டு தொடங்கினார். பில்கேட்ஸ் நிறுவனராகவும், பால் ஆலன் இணை நிறுவனருமாகவும் தொடங்கிய இந்நிறுவனம் மென்பொருள் துறையில் உலகின் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனாராக மட்டுமின்றி அமெரிக்காவின் பெரிய தொழிலதிபர், முதலீட்டாளர், அறப்பணியாளர், ஆகிய பன்முகங்களை கொண்டவர் பால் ஆனன். கடந்த 9 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கபப்ட்டிருந்த இவர் இன்று காலமானதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்ரிக்க நாடுகளில் எபோலோ நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை பவுல் ஜி வழங்கியுள்ளார். ‘ஐடியா மேன்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல்வேறு விருதுகளைம் பெற்றுள்ளார்.

 

Leave a Reply