shadow

மேற்குவங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சியா? பரவும் வதந்திகள்

மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பிரமாண்டமான மாநாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமித்ஷா, மோடி ஆகியோர் மாறி மாறி மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றானர்.

இந்த நிலையில் மேற்குவங்க காவல்துறைக்கும் சிபிஐ அதிகாரிகளுக்கும் திடீர் மோதல் ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மேற்குவங்க காவல்துறை ஆணையரை பார்க்க வந்த ஐவர் சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட விவகாரம், சிபிஐ-போலீஸ் மோதலை வெட்டவெளிச்சமாகியுள்ளது. இது சிபிஐ – போலீஸ் மோதலா? அல்லது மோடி-மம்தா மோதலா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகளை மேற்குவங்க காவல்துறையினர் கைது செய்தாது, முதல்வரே தர்ணா போராட்டம் ஆகியவற்றை நடப்பதால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவரப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Leave a Reply