shadow

மேகதாது அணையால் தமிழகத்திற்கு பாதிப்பு வருமா? ரஜினிகாந்த் பதில்

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மேகதாது அணை குறித்த விவாதங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது. அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் கர்நாடக மாநிலம் கட்டவுள்ள மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் கர்நாடக மாநில அமைச்சர் சிவகுமார், கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க மட்டுமே இந்த அணை கட்டப்படுவதாகவும் இதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என தெரிந்து கொள்ள வேண்டும என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply