shadow

மெல்போர்ன் டெஸ்ட்: வெற்றியை நெருங்கியது இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் 4வது ஆட்ட முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றியை நெருங்கிவிட்டது.

கடந்த 26ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை 106 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்த போது முடித்து கொண்டது. இதனையடுத்து 399 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டமுடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 258 ரன்கள் எடுத்துள்ளது

இன்னும் வெற்றிக்கு 141 ரன்கள் தேவையுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் கைவசம் 2 விக்கெட்டுக்கள் மட்டுமே உள்ளதால் இந்திய அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

Leave a Reply