shadow

‘மெர்சல்’ டாக்டருக்கு மு.க.ஸ்டாலின், தினகரன் இரங்கல்

நேற்று சென்னையில் ஐந்து ரூபாய் டாக்டர் என்று கூறப்படும் நிஜ மெர்சல் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திய நிலையில் அவருடைய மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியதாவது: வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் 41வருடங்களாக மருத்துவம் பார்த்த ‘மக்கள் மருத்துவர்’ ஜெயச்சந்திரன் மறைவெய்தியது வடசென்னை மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு! மனிதநேயத்திற்கு சாட்சியமாக திகழ்ந்த மருத்துவரின் மறைவை தனிப்பட்ட இழப்பாக கருதி வருந்தும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்

அதேபோல் டிடிவி தினகரன் கூறியதாவது: ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை அளித்த மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைவு; மனித நேயத்துடன் சேவையாற்றிய மருத்துவர் ஜெயச்சந்திரனை இழந்து வாடும் குடும்பத்துக்கு டிடிவி தினகரன் இரங்கல்

 

Leave a Reply