மெட்ரோ ரயில் நிலையங்களில் குடிநீர் சிக்கன நடவடிக்கை

மெட்ரோ ரயில் நிலையங்களில் குடிநீர் சிக்கன நடவடிக்கைகளுக்கு பயணிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தண்ணீர் சிக்கனத்தின் ஒரு பகுதியாக தரைக்கீழ்த் தளத்தில் உள்ள ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதி படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும், இதன்மூலம் குளிர்சாதன அமைப்புகளுக்கான தண்ணீர் பயன்பாடு குறைக்கப்பட்டு ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான குடிநீர்த் தேவை உள்ளிட்ட பயன்பாடுகளுக்குத் திருப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் காற்றோட்ட வசதியும், ஆக்சிஜன் அளவும் முறையாகப் பராமரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பயணிகள் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Leave a Reply