shadow

மெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது ?

பிரபல இயக்குனர் ராஜூமுருகன் கதைவசனத்தில் அவருடைய உதவி இயக்குனராக பணிபுரிந்த சரவணா ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மெகந்தி சர்க்கஸ். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் செகண்ட் சிங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 17 ஆம் தேதி டுவிட்டர் , யூடுயுப் போன்ற இணையதளங்களில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கஸை மையமாக கொண்ட இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சீன் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக செல்வகுமாரும் படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜுவும் உள்ளனர்.

Leave a Reply