shadow

மு.க.அழகிரி பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறிய பிரபல நடிகர் !

தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த தலைவர் கருணாநிதியின் மகனாக மு.க.அழகிரி அவர்களின் பிறந்தநாளையொட்டி பல தலைவர்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் மு.க.அழகிரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறுவதோடு மட்டுமல்லாமல் அரசியல் காலண்டரில் கடைசி பக்கம் என்பது யாருக்கும் இல்லை . உங்களுக்கும் ஒரு காலம் வரும் . எதிர்காலத்தில் எழுந்து வருவீர்கள் என்று கூறியுள்ளார் .

மு.க.அழகிரி, ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பதும் சென்னை வரும்போது அவர் தவறாமல் ரஜினியை சந்திப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் திமுகவில் மீண்டும் மு.க.அழகிரி இணையும் முயற்சி தோல்வி அடைந்ததால் ரஜினி கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply