முன்னாள் திமுக அமைச்சர் காலமானார்!

தமிழக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடல் நலக்குறைவால் திருச்சியில் நேற்று காலமானார். அவருக்க்கு வயது 75. முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மறைவிற்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சியின் போது வனத்துறை அமைச்சராக இருந்த செல்வராஜ் கடந்த 1944ம் ஆண்டு பிறந்தவர்.

திமுகவின் மூத்த உறுப்பினரான இவர் திருச்சி மாவட்ட தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். கடந்த 1987ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். கடந்த 1980ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

தி.மு.க. சார்பில் 2006ம் ஆண்டு முசிறி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இருந்துள்ளார்.

Leave a Reply