shadow

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் காலமானார்

அமெரிக்காவின் 41வது அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 94 கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கரின் மனைவி மறைந்த நாளில் இருந்தே உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்க இன்று சிகிச்சையின் பலனின்றி அவ்ருடைய குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

கடந்த 1924ஆம் ஆண்டு ஜுன் 12ஆம் தேதி பிறந்த ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் அமெரிக்காவின் 41வது அதிபராக 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இவருடைய மகன் புஷ் அமெரிக்காவின் 43வது அதிபராக 2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் அவர்களுக்கு ஐந்து குழந்தைகளும் 17 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

Leave a Reply