shadow

முன்கூட்டியே சட்டசபை கலைப்பா? முதல்வர் முடிவால் அதிர்ச்சியில் எம்.எல்.ஏக்கள்

முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் விதமாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வரும் வியாழக்கிழமை சட்டப்பேரவையை கலைப்பார் என தகவல் வெளியாகி உள்ளதால் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

தெலங்கானா முதல்வர், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, சட்டப்பேரவையைக் கலைத்து முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்கப் போவதாக, கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிசெய்யும் விதமாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வும், ஐதராபாத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில், ஆட்சியைக் கலைப்பதாக இருந்தால் தொண்டர்களிடம் முன்கூட்டியே தெரிவிப்பேன் என கூறினார்.

இந்த நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், வரும் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு, தனது சட்டப்பேரவையைக் கலைக்கலாம் என்று உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தத் தகவலை உறுதிச் செய்யும் பட்சத்தில், தெலங்கானா அமைச்சர்கள் அவர்களுக்கு கீழ் உள்ள மாவட்டங்களின் எம்எல்ஏக்களிடம், தொகுதி வளர்ச்சி நிதிக்கு அடுத்த 24 மணிநேரத்திற்கு விண்ணப்பிக்கும்படி தெரிவித்துள்ளனர். இதனால், நாளை மறுநாள் சந்திரசேகர ராவ் ஆட்சிக்கலைப்பு பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply